செந்தாழம்பூவில்

முன்னேர் பதிப்பகத்தின் 11வது புத்தகமாக சிவ. கணேசன் எழுதிய ‘செந்தாழம்பூவில்’ என்ற கட்டுரை நூலை வெளியிடுகிறோம்.

stpv

இந்தக் கட்டுரைகளை அவர் ஃபேஸ்புக்கில் தொடராக எழுதிவந்தபோது, மேலோட்டமாகதான் படித்தேன். ஒரு ரசிகனாக, இளையராஜா பாடல்களைப்பற்றி அவர் எழுதிய வரிகளைமட்டுமே உன்னிப்பாகக் கவனித்துப் பரவசப்பட்டேன்.

மெல்ல மெல்ல, ‘குந்தா’ என்கிற அவருடைய ஊர் (நான் அப்போது அதன் பெயரைக்கூடக் கேள்விப்பட்டதில்லை) என்னை உள்ளிழுத்துக்கொண்டது. ஊட்டி, கொடைக்கானலெல்லாம் எனக்கு வெறும் சுற்றுலாத் தலங்கள்தான். பிரபலமாகச் சொல்லப்படுகிற நான்கைந்து ’டூரிட்ஸ் ஸ்பாட்’களைத் தாண்டி வேறெதையும் கேள்விப்பட்டதுகூட இல்லை.

ஆனால் சிவ. கணேசன் காட்டும் நீலகிரி மலை மிகப் புதிதாக இருந்தது. அங்கே வாழும் மனிதர்களை ஒவ்வொருவராக அவர் அறிமுகப்படுத்த, அவர்களுடைய ஆளுமையும், அவருடைய மயக்கும் நடையும் என்னை மிகவும் ஈர்த்தது. ஏழெட்டுக் கட்டுரைகள் வரும்போதே புத்தகம் எங்கள் பதிப்பகத்துக்கு வேண்டும் என்று ரிசர்வ் செய்துவிட்டேன்.

இந்தக் கட்டுரைகளில் மலையும் அங்குள்ள (பெரும்பாலும்) மிடில் க்ளாஸ் மனிதர்களும் அவர்களுடைய உணர்வுகளும்தான் நாயகர்கள். அவர்களது வாழ்க்கையில் பின்னணி இசையாகத் திரைப்படப் பாடல்கள். அவை எங்கே இணைகின்றன, எங்கே விலகுகின்றன என்றே தெரியாதபடி பிணைத்துத் தந்திருப்பது பரவசமான வாசிப்பு அனுபவம்.

இந்நூலில் பிரதானமாகப் பத்து பாடல்கள். ஆனால் இது இசை ரசனை நூல் அல்ல, பாடல்களின் நுட்பங்களை விவரிப்பது அல்ல, அவை ஒவ்வொன்றையும் நூலாசிரியரோ, அவருடன் இருக்கும் கதாபாத்திரங்களோ எங்கே, எப்படிக் கேட்டார்கள் என்ற விவரிப்புதான் மொத்தப் புத்தகமும்.

ஆனால் ‘இவ்வளவுதானா’ என்று தோன்றுகிற இந்தக் கோட்டை வைத்துக்கொண்டு அவர் ஓர் அற்புதமான ஆட்டம் ஆடியிருக்கிறார். குறிப்பாக, ‘தூரத்தில் நான் கண்ட உன் முகம்’ பாடலைத் தான் முதன்முறையாகக் கேட்ட சூழ்நிலையை அவர் விவரித்திருக்கும் விதம்… இத்தனை நேர்த்தியான, சுவாரஸ்யமான ஒரு கட்டுரையை நான் சமீபத்தில் வாசித்ததில்லை!

சிவ. கணேசன் தன் கட்டுரைகளின் பின்னணியாக அமைத்திருக்கும் பத்து பாடல்களில் ஒன்பது இளையராஜா இசையமைத்தவை. ராஜாவின் பாடல்களை யார் யாரோ எப்படியெல்லாமோ ரசிக்கிறார்கள், இவர் அந்தப் பாடல்களுக்குள் இருக்கும் குளிரை நமக்கு வெளியிலெடுத்துக் காட்டுகிறார். நிஜமாகவே இந்நூலைப் படிக்கும்போது குளிரடிக்கிறது என்று சொன்னால் புகழ்ச்சியில்லை, உண்மை!

நாளைக்கே ராஜஸ்தானில் வளர்ந்த ஒரு தமிழர், இதே பாடல்களில் பாலைவனம் இருக்கிறது என்று சொல்லித் தன் அனுபவங்களின் அடிப்படையில் ஒரு நூல் எழுதினால் நான் ஆச்சர்யப்படமாட்டேன். அதுதான் இளையராஜா 🙂

இந்தியாவில் திரைப்பாடல்கள் நமக்கு வெறும் பொழுதுபோக்கல்ல, அவை வாழ்க்கையின் ஒரு பகுதி, சிவ. கணேசனின் இந்நூல் அதனைக் கொண்டாடுகிறது.

’செந்தாழம்பூவில்’ நூல் இன்று ஈபுத்தகமாக வெளியாகிறது. சென்னை புத்தகக் கண்காட்சியில் அச்சுப் புத்தகம் கிடைக்கும்.

ஈபுத்தகம் (விலை $1.49) வாங்க:

https://play.google.com/store/books/details?id=U8XHBQAAQBAJ

அச்சுப் புத்தகத்தை (விலை ரூ 90) முன்பதிவு செய்ய: munnerpub@gmail.com

Advertisements
Standard

நவராத்திரி: நூல் அறிமுகம்

முன்னேர் பதிப்பக வெளியீடான ‘நவராத்திரி’ நூலுக்குத் திரு KRS அவர்களின் அறிமுகம் + விமர்சனம் இங்கே:

http://amas32.wordpress.com/2014/09/16/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/

இந்நூலை வாங்க விரும்புவோருக்கான விவரங்கள் இங்கே: https://munnerpathippagam.wordpress.com/2014/09/12/navartri/

 

Standard

நவராத்திரி: பரிசுப் போட்டி

கொலுப் புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்வது தனி மகிழ்ச்சி. உங்கள் வீட்டுக் கொலுவொன்றின் சிறந்த புகைப்படம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து மக்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். சிறந்த 10 புகைப்படங்களுக்குப் பரிசு: ‘நவராத்திரி’ புத்தகம், ஆசிரியர் ஆட்டோகிராஃபுடன்!

  • சென்ற வருடக் கொலுவாக இருக்கலாம், முப்பது வருடத்துக்கு முந்தைய கொலுவாக இருக்கலாம், உங்கள் சாய்ஸ்!
  • ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட புகைப்படங்களையும் சமர்ப்பிக்கலாம்
  • புகைப்படங்களை ஃபேஸ்புக் அல்லது ட்விட்டரில் பகிர்ந்துகொள்ளலாம், with a personal note!
  • இதோடு, இந்தப் போட்டியில் பங்கேற்க நீங்கள் இரு விஷயங்களைச் செய்யவேண்டும்:
  1. உங்களுடைய கொலுவின் புகைப்படத்துடன் இந்த இணைப்பு கண்டிப்பாகத் தரப்படவேண்டும்: https://munnerpathippagam.wordpress.com/2014/09/12/navartri/
  2. Post செய்தபிறகு, உங்களுடைய புகைப்படத்தின் இணைப்பை (புகைப்படத்தை அல்ல) munnerpub@gmail.comக்கு அனுப்பிவைக்கவேண்டும்
  • இவற்றிலிருந்து சிறந்த 10 புகைப்படங்களை ‘நவராத்திரி’ நூலின் ஆசிரியர் சுஷிமா சேகர் தேர்வு செய்வார். அவரது தீர்மானத்துக்கு அப்பீல் கிடையாது 😛
  • முன்னேர் பதிப்பகம் பரிசு அறிவிப்பில்மட்டும் உங்களுடைய புகைப்படங்களைப் பயன்படுத்தும், மற்றபடி புகைப்படங்களின் முழு உரிமையும் உங்களுடையது
  • பரிசுப் புத்தகங்களை இந்திய முகவரிகளுக்குமட்டுமே அனுப்ப இயலும். நீங்கள் வெளிநாட்டவர் எனில், உங்களது நண்பர் / உறவினரின் இந்திய முகவரியைத் தரலாம்
  • புகைப்படங்களை அனுப்பவேண்டிய நிறைவுத் தேதி: 22 செப்டம்பர்

அப்புறமென்ன? உங்கள் டிஜிட்டல் ஆல்பம்களைப் புரட்டத் தொடங்குங்கள். அட்வான்ஸ் வாழ்த்துகள்!

Standard

பண்டிகை வந்தாச்சு!

இந்த ஆண்டு நவராத்திரி நெருங்கிவிட்டது. கொலு பொம்மையெல்லாம் வாங்க ஆரம்பிச்சாச்சா? கொலுப்படி எடுத்துவைக்க “உரிய நபர்”க்குக் கட்டளை போட்டாச்சா? 🙂

பண்டிகைக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, முன்னேர் பதிப்பகம் வெளியிட்டுள்ள புதிய நூல், சுஷிமா சேகர் எழுதிய “நவராத்திரி”. இப்பண்டிகை குறித்த சகல விவரங்கள், கதைகள், பழக்கவழக்கங்கள், சமையல் குறிப்புகள், டிப்ஸ் என்று அருமையான ஓவியங்களுடன் பரிசுப் பதிப்பாகத் தயாராகியுள்ளது. உங்கள் வீட்டுக் கொலுவுக்கு வருகிறவர்களுக்குப் பரிசளிக்க ஏற்ற நூல் இது. விலையும் உங்கள் பட்ஜெட்டுக்குள் இருக்கும்!

BvzLAWwCQAATdkO

இந்நூலின் விலை ரூ 35. விழாவுக்காக இதனை மொத்தமாக வாங்கிப் பரிசளிக்க எண்ணுவோருக்கான சிறப்பு விலை:

* 3 பிரதிகளுக்குமேல்: தபால் செலவு இலவசம்
* 10 பிரதிகளுக்குமேல்: 10% தள்ளுபடி (ஒரு பிரதியின் விலை ரூ 31.50)
* 20 பிரதிகளுக்குமேல்: 20% தள்ளுபடி (ஒரு பிரதியின் விலை ரூ 28)
* 100 பிரதிகளுக்குமேல்: 30% தள்ளுபடி (ஒரு பிரதியின் விலை ரூ 24.50)

இதுகுறித்த மேல் விவரங்களுக்கு முன்னேர் பதிப்பகத்தைத் தொடர்புகொள்ளுங்கள்: munnerpub@gmail.com அல்லது (0)8050949676

தனிப்பிரதிமட்டும் வாங்க விரும்புவோரும் இம்முகவரிக்கு எழுதலாம், அல்லது இணையத்தில் நேரடியாக வாங்கலாம்: https://www.nhm.in/shop/100-00-0002-295-5.html

Standard

நவராத்திரி

எங்களது புதிய வெளியீடு (செப்டம்பர் 2014): நவராத்திரி by சுஷிமா சேகர்.

BvzLAWwCQAATdkO

முப்பெரும் தேவியராகிய லட்சுமி, சரஸ்வதி, துர்க்கையைப் போற்றும்வகையில் இந்தியாமுழுவதும் நவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கொலு வைப்பதில் தொடங்கி நடனம், பாட்டு என்று பக்தியோடு கலையைக் குழைத்துத் தரும் சிறந்த பண்டிகை இது!

நவராத்திரியை ஏன் கொண்டாடுகிறோம்? எப்படிக் கொண்டாடவேண்டும்? கொலு வைப்பது எதற்காக? எப்படி? நவராத்திரியில் சுண்டல் பிரசாதம் ஏன்? என்னென்ன சுண்டல்கள் செய்யலாம்? எப்படிச் செய்யலாம்? பிற மாநிலங்களில் நவராத்திரி எப்படிக் கொண்டாடப்படுகிறது? அதற்கான பூஜைகள் என்னென்ன? அவற்றை எப்படிச் செய்வது? என்னென்ன சுலோகங்கள் சொல்வது? குழந்தைகளை இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்கச் செய்வது எப்படி?… எல்லாக் கேள்விகளுக்கும் விளக்கமாகப் பதில் தரும் புத்தகம் இது. அழகிய ஓவியங்களுடன் நேர்த்தியான பரிசுப் பதிப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

அன்னையரின் அருள் மழை உங்கள் இல்லத்தில் பொழியட்டும்!

பக்கங்கள்: 96

விலை: ரூ 35, தபால் செலவு தனி (சென்னையில் உள்ளோர் விரும்பினால் நேரில் பெற்றுக்கொள்ளலாம்)

மூன்று பிரதிக்குமேல் வாங்குவோருக்குத் தபால் செலவு இலவசம் (இந்திய முகவரிகளுக்குமட்டும்)

பிறருக்கு வாங்கிப் பரிசளிக்க விரும்புவோர் 20 பிரதிகளுக்குமேல் வாங்கினால் 20% தள்ளுபடியில் (பிரதி ரூ 28) கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு: munnerpub@gmail.com

இந்நூலின் ஐந்து பிரதிகள் கொண்ட பரிசுப் பொதிகளை (விலை ரூ 150) இணையத்தில் வாங்குவதற்கான இணைப்பு: http://600024.com/store/navarathri-munner-publication

Standard

A Review Of Unleash The Appatucker In U / நீங்களும் ஆகலாம் அப்பாடக்கர் by Dr. Kalanidhi, Former Vice Chancelor, Anna University

wrappers

Every Individual has inherent potential for doing things and achieving the same. However how he is doing, at what time he is doing and when does he achieve the same is very critical.

There are many textbooks and inspiring leadership guide available today. Here is one written by ‘Vibrant Subbu’ that inspires the youngsters to bring out the innate talents and leadership qualities. Core speciality about this book is that he is able to quote one leader grown in the society for each chapter. This is unique because he is able to showcase Indian examples.

I am sure many youngsters would be attracted to this. This book is stimulating one for the youngsters. This book plays an important role in bringing and developing the Indian Human Resource which is truly vital in the content of global village. I compliment ‘Mr. Vibrant Subbu’ for his bold venture in shaping the human resource apart from his training activities for human resource development.

Dr. A. Kalanidhi,
Former Vice Chancelor, Anna University,
Vice Chairman, CSTAR,
Chennai- 600 025

To Buy this book online:

English: http://600024.com/store/unleash-the-appatucker-in-u-english-vibrant-subbu

Tamil (Printed): http://600024.com/store/neengalum-aagalam-appatucker-munner-pathippagam

Tamil (Ebook): http://cyclegap.in/neengalum-agalam-appatucker.html

For Bulk Purchase Discounts: munnerpub@gmail.com

Standard

’என் ஜன்னல் வழிப் பார்வையில்’ ட்வீட் கவிதைப் போட்டி: ஜெயித்த கவிதைகள்

’என் ஜன்னல் வழிப் பார்வையில்’ கவிதை நூலை முன்வைத்து நடத்தப்பட்ட ட்வீட் கவிதைப் போட்டிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு நன்றி. நல்ல பல கவிதைகள் வந்திருந்தன. அவற்றை நீங்கள் https://www.facebook.com/ejvpbook பக்கத்தில் வாசிக்கலாம்.

இந்தக் கவிதைகளில் பரிசு பெறும் மூன்று கவிதைகள் எவை? நூலாசிரியர் ஆரூர் பாஸ்கரைக் கேட்போம்:

முதல் கவிதை Ramya Ravindran எழுதியது. அலுவலகத்திலும் உழைக்கும் ஒரு தாயின் மனோநிலையை எதார்த்தமாகச் சொல்கிறார்..

ஏசி ஆபீஸ்,
ஐந்திலக்க சம்பளம்,
ஜன்னல் ஒர இருக்கை,
ஏவல் புரிய அநேகம் பேர்,
அழும் என் குழந்தையை
அடித்துவிடக்கூடாது ஆயா என்ற
பிரார்த்தனையுடன் நான்!

இரண்டாவது கவிதை Mayiluu Latha எழுதியது. மணமாகாத ஒரு பெண்ணின் மனம் மிக அழகாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

‎ஜன்னல் ஓரத்தில் நின்று
வானத்தை வெறிக்கிறேன்.
எனக்கான ராஜகுமாரன்
குதிரையில் வராவிட்டாலும்
நடந்தாவது வந்தாலும் சரி!

மூன்றாவது கவிதை Balaji Natarajan எழுதியது. சந்த நயத்துடன் சிந்தனையைத் தூண்டும் ஒன்று.

எரியிலும் அப்பெருவெளியிலுமுண்டே
அரியவன் சதிரினில் புரிபடா புதிர்களே
தெரிகனவினில் எழுமவன் அலகிலா களிகளே
உயிரெரியுமுன் வரட்டுமென் பார்வையில்

பரிசு பெற்ற மூவருக்கும் வாழ்த்துகள். அவர்கள் எங்களை munnerpub@gmail.comல் தொடர்பு கொண்டு புத்தகம் அனுப்புவதற்கான அஞ்சல் முகவரி தர வேண்டுகிறோம்.

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் எங்கள் நன்றிகள்!

Standard