‘நாலு வரி நோட்டு’ நூல்கள் விமர்சனம்

முன்னேர் பதிப்பகம் வெளியிட்டுள்ள ’நாலு வரி நோட்டு’ நூல்களைப்பற்றி திரு. பால கணேஷ் அவர்கள் எழுதியுள்ள ஒரு விமர்சனத்தை இங்கே வாசிக்கலாம்:

http://minnalvarigal.blogspot.com/2014/01/blog-post_27.html

Advertisements
Standard

வீடு தேடி வரும் ‘நாலு வரி நோட்டு’

சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு, அங்கே வழங்கப்படும் அதே 10% தள்ளுபடியுடன் (ரூ 375 – ரூ 37.50 = ரூ 337.50) உங்கள் வீடுகளுக்கே ‘நாலு வரி நோட்டு’ செட் புத்தகங்கள் வந்து சேரும், கூரியர் கட்டணம் இல்லை. இந்தச் சலுகை சென்னை முகவரிகளுக்குமட்டுமே.

ஆர்வமுள்ளோர் munnerpub@gmail.comக்கு எழுதலாம் and/or மற்றவர்களுக்குச் சொல்லலாம். நன்றி!

Standard

சென்னை புத்தகக் கண்காட்சியில் ‘நாலு வரி நோட்டு’ நூல்கள்

சென்னை புத்தகக் கண்காட்சியில் எங்களது ‘நாலு வரி நோட்டு’ நூல்கள் இந்த ஸ்டால்களில் கிடைக்கின்றன: டிஸ்கவரி புக் பேலஸ் (ஸ்டால் எண்: 307, 308, 353, 354), க்ரியேட்டிவ் புக்ஸ் (ஸ்டால் எண்: 386).

சில புகைப்படங்கள் உங்களுக்காக:

IMG-20140115-WA0000 IMG-20140115-WA0001 IMG-20140115-WA0002 IMG-20140115-WA0003

Standard

நாலு வரி நோட்டு : ஒரு போட்டி

பரபரப்பாகத் தொடங்கியுள்ள சென்னை புத்தகக் கண்காட்சிக்காக முன்னேர் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘நாலு வரி நோட்’ புத்தகங்களில் ஒன்று இலவசமாக (ஸாரி, விலையில்லாமல்) உங்களுடைய இல்லம் தேடி வரவேண்டுமா?

இதற்கு நீங்கள் செய்யவேண்டியவை இரண்டே விஷயங்கள். அதற்குமுன்னால் புத்தகத்தைப்பற்றி நாலு வரி:

4variwrappers

 • தமிழ்த் திரைப்பாடல் வரிகளின்வழியே இலக்கியம், இலக்கணம், கலாசாரம், வரலாறு, அறிவியல்… இன்னும் பல விஷயங்களைச் சுவையாகச் சொல்லும் நூல் இது, நம் இணையற்ற பாடலாசிரியர்களைக் கொண்டாடுவதே இதன் நோக்கம்
 • இந்நூல் மூன்று தொகுதிகளாகக் கிடைக்கிறது. ஒவ்வொன்றும் 160 பக்கங்கள், விலை ரூ 125
 • சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்த நூல்களை இந்த ஸ்டால்களில் வாங்கலாம்: டிஸ்கவரி புக் பேலஸ் (ஸ்டால் எண்: 307, 308, 353, 354), க்ரியேட்டிவ் புக்ஸ் (ஸ்டால் எண்: 386)
 • ஆன்லைனில் இந்நூல்களை வாங்க: 600024.com/store/4-vari-note/

இந்த மூன்று நூல்களில் ஒன்றை இலவசமாகப் பெற நீங்கள் செய்யவேண்டிய விஷயங்கள்:

1. ஃபேஸ்புக் அல்லது ட்விட்டரில் இந்நூல்கள்பற்றிய ஒரு சிறு குறிப்பை #4VariNote என்ற Hashtag உடன் பகிர்ந்துகொள்ளுங்கள் (RT / Share செல்லாது சென்ராயன், நீங்களே ஒரே ஒரு வரி எழுதினாலும் போதும் :). இந்தக் குறிப்பில் இந்தப் பதிவுக்கான இணைப்பு இருக்கவேண்டும்: https://munnerpathippagam.wordpress.com/2014/01/13/4vncntst/

2. இதைப் பகிர்ந்துகொண்ட கையோடு, இந்த Formல் உங்கள் விவரங்களை நிரப்புங்கள், ஃபேஸ்புக், ட்விட்டர் இரண்டிலும் இச்செய்தியைப் பகிர்ந்துகொண்டவர்கள் இரண்டுமுறை நிரப்பலாம். ஆனால் பரிசு ஒன்றுதான் கிடைக்கும் 😛

https://docs.google.com/forms/d/1-Ise5VMGVuaVXEkEkGj5lh0duCHiAAy-PfU9GHqw71I/viewform

புத்தகக் கண்காட்சியின்போது (ஜனவரி 22ம் தேதிவரை) இப்படிப் பகிர்ந்துகொண்ட இணைப்புகளில் இருந்து குலுக்கல் முறையில் (ஹிஹி, இது டிஜிட்டல் குலுக்கல்) 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்குத் தலா ஒரு புத்தகம் (மொத்தம் 12 புத்தகங்கள், நான்கு செட்கள்) பரிசாக அனுப்பப்படும்.

சில விஷயங்கள்:

 1. எந்நாட்டைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கலாம். ஆனால் பரிசை அனுப்புவதற்கு இந்திய முகவரி தரவேண்டும்
 2. பரிசு பெறுவோர் எந்தப் பாரபட்சமும் இன்றி Online Random Number Generation முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், அக்காட்சியை வீடியோவாகப் படம் பிடித்து யூட்யூபில் இணைப்போம்
 3. உங்கள் ட்விட்டர் அல்லது ஃபேஸ்புக் செய்தியில் #4VariNote என்ற Hashtag கண்டிப்பாக இருக்கவேண்டும், கூடவே மேற்கண்ட இணைப்பும் கண்டிப்பாக இருக்கவேண்டும், இவை இல்லாத மெஸேஜ்கள் (குலுக்கலில் தேர்வானாலும்) நிராகரிக்கப்படும்
 4. நீங்கள் தரும் விவரங்கள் எவரிடமும் விற்கப்படாது, பரிசு பெற்றோரைத் தொடர்புகொள்ளமட்டுமே இவை பயன்படுத்தப்படும்
 5. மூன்று வெவ்வேறு நூல்கள் உள்ளதால், தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கும் இலவச நூல் எது என்பது எங்களது தேர்வு, அதிலும் முடிந்தவரை உங்களுடைய விருப்பத் தேர்வையே தர முயற்சி செய்வோம்
 6. பரிசுப் புத்தகங்கள் நன்கு Pack செய்யப்பட்டு கூரியரில் அனுப்பப்படும். வழியில் அவை தாமதமானாலோ சேதமடைந்தாலோ உரிய முகவரிக்கு வந்து சேராவிட்டாலோ சம்பந்தப்பட்ட கூரியர் நிறுவனத்துடன் தொடர்புகொள்ளவேண்டியது பரிசுபெற்றோர் பொறுப்பு
 7. போட்டிக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்துப் பரிசுப் புத்தகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ குறைக்கவோம் முன்னேர் பதிப்பகத்துக்கு உரிமை உண்டு

உங்கள் ஆதரவுக்கு நன்றி!

Standard

சென்னை புத்தகக் கண்காட்சியில் முன்னேர் பதிப்பக நூல்கள்

சென்னை புத்தகக் கண்காட்சி ஸ்டால் எண் 386(க்ரியேட்டிவ் புக்ஸ்)ல் முன்னேர் பதிப்பகத்தின் ‘நாலு வரி நோட்டு’ நூல்கள் (3 தொகுதி) இப்போது கிடைக்கின்றன.

Standard

நாலு வரி நோட்டு

எங்களது முன்னேர் பதிப்பகத்தின் முதல் மூன்று நூல்களாக ‘நாலு வரி நோட்டு’ என்ற கட்டுரைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளோம்.

அதென்ன ‘நாலு வரி நோட்டு’?

பொதுவாகவே, பாடலாசிரியர்களுக்கு நம் சமூகத்தில் மரியாதை ஒரு மாற்றுக் குறைவுதான். கண்ணதாசனும் வைரமுத்துவும் பெரிதாக மதிக்கப்பட்டபோதும், ‘இந்தப் பாட்டை எழுதியவர் யார்?’ என்ற கேள்வியைத் தமிழர்கள் அவ்வளவாகக் கேட்பதும் இல்லை, அதற்கான பதில் குறித்து அலட்டிக்கொள்வதும் இல்லை.

இணையத்திலோ, அச்சு ஊடகங்களிலோ பல பாடல்கள் சிலாகிக்கப்படும், இசையமைப்பாளர், பாடகரைப் புகழ்வார்கள், அதில் வாயசைத்த நடிகர்கூட கொண்டாடப்படுவார். ஆனால் எழுதியவர் பெயர் குறிப்பிடப்படாது. நாம் வலியச் சென்று சொன்னாலும், ‘ஆமா, அதுக்கு என்ன?’ என்பார்கள்.

மொழி இன்றி இசை இருக்கலாம், இசை இன்றி மொழி இருக்கலாம், ஆனால் இவை இரண்டும் இணைந்து ஒரு கொண்டாட்டமாகும்போது அதில் சம்பந்தப்பட்ட இருவருக்கும் சம மரியாதை தரப்படவேண்டுமல்லவா?

அந்தவிதத்தில் நம்முடைய சமூகம் பாடலாசிரியர்களுக்குப் பெரும் துரோகம் செய்துவருகிறது, இன்றும்.
அந்த எண்ணத்தைக் கொஞ்சமேனும் மாற்றும் முயற்சிதான் ‘நாலு வரி நோட்டு’. அடுத்தமுறை ஒரு நல்ல பாட்டைக் கேட்கும்போது, வரிகளைக் கொஞ்சம் கவனிக்கத் தோன்றினால், ‘இதை எழுதியது யாராக இருக்கும்?’ என்கிற கேள்வியாவது உங்கள் மனத்தில் எழுந்தால் சந்தோஷம்.

இந்நூல்களைப்பற்றிய கூடுதல் விவரங்கள் இங்கே:

 • நாலு வரி நோட்டு : பாகம் 1 : என். சொக்கன் : முன்னேர் பதிப்பகம் : ரூ 125/-
 • நாலு வரி நோட்டு : பாகம் 2 : ஜிரா : முன்னேர் பதிப்பகம் : ரூ 125/-
 • நாலு வரி நோட்டு : பாகம் 3 : மோகனகிருஷ்ணன் : முன்னேர் பதிப்பகம் : ரூ 125/-

இந்நூல்களை ஆன்லைனில் வாங்க:

பாகம் 1: http://600024.com/store/4-vari-note/naalu-vari-note-1
பாகம் 2: http://600024.com/store/4-vari-note/naalu-vari-note-2
பாகம் 3: http://600024.com/store/4-vari-note/naalu-vari-note-3

இவை அனைத்தையும் ஒரே ‘செட்’டாக வாங்கினால் ரூ 325க்குக் கிடைக்கும்:

http://600024.com/store/4-vari-note/naalu-vari-note

இந்நூல்கள் சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். ஸ்டால் எண் 386 (க்ரியேட்டிவ் புக்ஸ்).

நீங்கள் இந்நூல்களை உங்கள் நண்பர்கள் / உறவினர்கள் / வாடிக்கையாளர்கள் / சக ஊழியர்களுக்குப் பரிசளிக்க விரும்பினால், கீழே உள்ள விவரப்படி Bulk Discount வழங்குகிறோம்:

வழக்கமான விலை: செட் ரூ 375

 • 5 அல்லது அதற்கு மேற்பட்ட செட்கள் : 20% தள்ளுபடி (ஒரு செட்: ரூ 300/-) + இலவச Gift Wrapping
 • 10 அல்லது அதற்கு மேற்பட்ட செட்கள் : 25% தள்ளுபடி (ஒரு செட்: ரூ 282) + இலவச Gift Wrapping
 • 25 அல்லது அதற்கு மேற்பட்ட செட்கள் : 30% தள்ளுபடி (ஒரு செட் ரூ 263) + இலவச Gift Wrapping

குறிப்பு: இவை அனைத்திலும் Shipping Cost தனி. பார்சல் சர்வீஸ்மூலம் நீங்களே சென்று பெற்றுக்கொள்வதென்றால் சுமார் ரூ 100 செலவாகும். கூரியர் தொகை மிக அதிகமாக இருக்கும். சென்னை அல்லது பெங்களூரில் உங்களால் நேரில் பெற்றுக்கொள்ள இயலும் என்றால் இந்தச் செலவை மிச்சப்படுத்தலாம்

இதுகுறித்து ஏதும் கேள்விகள் இருப்பின் nchokkan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி. இனிய பொங்கல் வாழ்த்துகள்!

Standard