நாலு வரி நோட்டு

எங்களது முன்னேர் பதிப்பகத்தின் முதல் மூன்று நூல்களாக ‘நாலு வரி நோட்டு’ என்ற கட்டுரைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளோம்.

அதென்ன ‘நாலு வரி நோட்டு’?

பொதுவாகவே, பாடலாசிரியர்களுக்கு நம் சமூகத்தில் மரியாதை ஒரு மாற்றுக் குறைவுதான். கண்ணதாசனும் வைரமுத்துவும் பெரிதாக மதிக்கப்பட்டபோதும், ‘இந்தப் பாட்டை எழுதியவர் யார்?’ என்ற கேள்வியைத் தமிழர்கள் அவ்வளவாகக் கேட்பதும் இல்லை, அதற்கான பதில் குறித்து அலட்டிக்கொள்வதும் இல்லை.

இணையத்திலோ, அச்சு ஊடகங்களிலோ பல பாடல்கள் சிலாகிக்கப்படும், இசையமைப்பாளர், பாடகரைப் புகழ்வார்கள், அதில் வாயசைத்த நடிகர்கூட கொண்டாடப்படுவார். ஆனால் எழுதியவர் பெயர் குறிப்பிடப்படாது. நாம் வலியச் சென்று சொன்னாலும், ‘ஆமா, அதுக்கு என்ன?’ என்பார்கள்.

மொழி இன்றி இசை இருக்கலாம், இசை இன்றி மொழி இருக்கலாம், ஆனால் இவை இரண்டும் இணைந்து ஒரு கொண்டாட்டமாகும்போது அதில் சம்பந்தப்பட்ட இருவருக்கும் சம மரியாதை தரப்படவேண்டுமல்லவா?

அந்தவிதத்தில் நம்முடைய சமூகம் பாடலாசிரியர்களுக்குப் பெரும் துரோகம் செய்துவருகிறது, இன்றும்.
அந்த எண்ணத்தைக் கொஞ்சமேனும் மாற்றும் முயற்சிதான் ‘நாலு வரி நோட்டு’. அடுத்தமுறை ஒரு நல்ல பாட்டைக் கேட்கும்போது, வரிகளைக் கொஞ்சம் கவனிக்கத் தோன்றினால், ‘இதை எழுதியது யாராக இருக்கும்?’ என்கிற கேள்வியாவது உங்கள் மனத்தில் எழுந்தால் சந்தோஷம்.

இந்நூல்களைப்பற்றிய கூடுதல் விவரங்கள் இங்கே:

  • நாலு வரி நோட்டு : பாகம் 1 : என். சொக்கன் : முன்னேர் பதிப்பகம் : ரூ 125/-
  • நாலு வரி நோட்டு : பாகம் 2 : ஜிரா : முன்னேர் பதிப்பகம் : ரூ 125/-
  • நாலு வரி நோட்டு : பாகம் 3 : மோகனகிருஷ்ணன் : முன்னேர் பதிப்பகம் : ரூ 125/-

இந்நூல்களை ஆன்லைனில் வாங்க:

பாகம் 1: http://600024.com/store/4-vari-note/naalu-vari-note-1
பாகம் 2: http://600024.com/store/4-vari-note/naalu-vari-note-2
பாகம் 3: http://600024.com/store/4-vari-note/naalu-vari-note-3

இவை அனைத்தையும் ஒரே ‘செட்’டாக வாங்கினால் ரூ 325க்குக் கிடைக்கும்:

http://600024.com/store/4-vari-note/naalu-vari-note

இந்நூல்கள் சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். ஸ்டால் எண் 386 (க்ரியேட்டிவ் புக்ஸ்).

நீங்கள் இந்நூல்களை உங்கள் நண்பர்கள் / உறவினர்கள் / வாடிக்கையாளர்கள் / சக ஊழியர்களுக்குப் பரிசளிக்க விரும்பினால், கீழே உள்ள விவரப்படி Bulk Discount வழங்குகிறோம்:

வழக்கமான விலை: செட் ரூ 375

  • 5 அல்லது அதற்கு மேற்பட்ட செட்கள் : 20% தள்ளுபடி (ஒரு செட்: ரூ 300/-) + இலவச Gift Wrapping
  • 10 அல்லது அதற்கு மேற்பட்ட செட்கள் : 25% தள்ளுபடி (ஒரு செட்: ரூ 282) + இலவச Gift Wrapping
  • 25 அல்லது அதற்கு மேற்பட்ட செட்கள் : 30% தள்ளுபடி (ஒரு செட் ரூ 263) + இலவச Gift Wrapping

குறிப்பு: இவை அனைத்திலும் Shipping Cost தனி. பார்சல் சர்வீஸ்மூலம் நீங்களே சென்று பெற்றுக்கொள்வதென்றால் சுமார் ரூ 100 செலவாகும். கூரியர் தொகை மிக அதிகமாக இருக்கும். சென்னை அல்லது பெங்களூரில் உங்களால் நேரில் பெற்றுக்கொள்ள இயலும் என்றால் இந்தச் செலவை மிச்சப்படுத்தலாம்

இதுகுறித்து ஏதும் கேள்விகள் இருப்பின் nchokkan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி. இனிய பொங்கல் வாழ்த்துகள்!

Advertisements
Standard

One thought on “நாலு வரி நோட்டு

  1. Pingback: நாலு வரி நோட்டு – ஒரு பார்வை | Prakash's Chronicle 2.0

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s