அம்மா தொகுதியில் அப்பாடக்கர்

wrappers

நாளை காலை 10:30 மணிக்கு ஸ்ரீரங்கம் சின்மயா வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு முன்னேர் பதிப்பக வெளியீடான வைப்ரன்ட் சுப்புவின் ‘Unleash the Appatucker in U” புத்தகங்களை வழங்கும் விழா நடைபெறுகிறது. திருச்சிவாழ் மக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்கக் கோருகிறோம்!

Advertisements
Standard

என் ஜன்னல் வழிப் பார்வையில்: ட்வீட் கவிதைப் போட்டி

EJVP

ஆரூர் பாஸ்கர் எழுதியுள்ள ‘என் ஜன்னல் வழிப் பார்வையில்’ கவிதைத் தொகுப்பு உங்களுக்கு வேண்டுமா?

அதற்கு மூன்று வழிகள்:

1. இணையத்தில் அதனை வாங்கலாம்: http://600024.com/store/en-jannal-vazhi-paarvaiyil-munner-pathippagam

2. ஒலி வடிவில் கேட்கலாம்: https://soundcloud.com/sbaski/sets/audio

3. பரிசு பெறலாம்: எப்படி?

என், ஜன்னல், வழி, பார்வை என்ற நான்கு சொற்களில் எவையேனும் இரண்டைப் பயன்படுத்தி ஒரு ட்வீட் கவிதை எழுதுங்கள். அதாவது, 140 எழுத்துகளுக்குள் ஒரு கவிதை. புதுக்கவிதை, மரபுக்கவிதை, காதல், சமூகம், குடும்பம்… எதுவாகவும் இருக்கலாம், வாசிக்கச் சுகமாக இருக்கவேண்டும். அவ்வளவுதான்.

நூலாசிரியர் ஆரூர் பாஸ்கரால் தேர்ந்தெடுக்கப்படும் கவிதைகள் மூன்றுக்கு ‘என் ஜன்னல் வழிப் பார்வையில்’ நூல் பரிசு. அவர்களின் இந்திய முகவரிக்குப் புத்தகம் அனுப்பிவைக்கப்படும்.

உங்கள் கவிதைகளை ஜூலை 4ம் தேதிக்குள் https://www.facebook.com/ejvpbook என்ற பக்கத்தில் இடவேண்டும். ஞாபகமிருக்கட்டும் 140 எழுத்துகளைத் தாண்டக்கூடாது, என், ஜன்னல், வழி, பார்வை என்ற சொற்களில் இரண்டு அதில் இடம்பெற்றிருக்கவேண்டும், இரண்டுக்கு மேல் இருந்தால் உங்கள் சமர்த்து!

அப்புறமென்ன, கற்பனைக் குட்டிக் குதிரையைத் தூண்டிவிடுங்கள். அட்வான்ஸ் வாழ்த்துகள்!

Standard

ஒலி வழிக் கவிதைகள்

முன்னேர் பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ‘என் ஜன்னல் வழிப் பார்வை’ தொகுதியிலிருந்து சில கவிதைகள், ஒலி வடிவில் நீங்கள் கேட்டு மகிழ.

இந்நூல்பற்றி மேலும் அறிய: https://munnerpathippagam.wordpress.com/2014/06/26/enjnlvzp/

இந்நூலை ஆன்லைனில் வாங்க: http://600024.com/store/en-jannal-vazhi-paarvaiyil-munner-pathippagam

இன்னும் இந்நூல் தொடர்பான பல சுவையான விவரங்கள், நீங்கள் கேட்டு, வாசித்து ரசிக்கத்தக்க விஷயங்கள் அடுத்தடுத்து இங்கே வெளியாகும். காத்திருங்கள் 🙂

Standard

என் ஜன்னல் வழிப் பார்வையில்

முன்னேர் பதிப்பகம் வெளியிடும் புதிய நூல், எங்களது முதல் புதுக் கவிதை நூல் “என் ஜன்னல் வழிப் பார்வையில்”. இதனை எழுதியுள்ளவர் ஆரூர் பாஸ்கர்.

EJVP

திருவாரூரைச் சேர்ந்த ஆரூர் பாஸ்கர் படித்தது இயற்பியலும் கணினித் தொழில்நுட்பமும். தமிழ்மீது தணியாத ஆர்வம் கொண்டவர். வாழ்க்கையை அழகு மொழியில் நுட்பமான கவிதைகளாகப் பதிவு செய்கிறவர். ஆரூர் பாஸ்கர் இப்போது ஃப்ளோரிடா, அமெரிக்காவில் பணி புரிந்துவருகிறார். இவரது முதல் கவிதைத் தொகுப்பு இது. 88 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் விலை ரூ 75. விரைவில் இது தமிழகக் கடைகளில் கிடைக்கும். தற்போது ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். அதற்கான முகவரி: 600024.com/store/en-jannal-vazhi-paarvaiyil-munner-pathippagam இந்நூல் தொடர்பான பல சுவையான விவரங்கள், நீங்கள் கேட்டு, வாசித்து ரசிக்கத்தக்க விஷயங்கள் அடுத்தடுத்து இங்கே வெளியாகும். காத்திருங்கள் 🙂

Standard

அப்பாடக்கர் V 2.0

வைப்ரண்ட் சுப்பு எழுதிய ‘நீங்களும் ஆகலாம் அப்பாடக்கர்’ மற்றும் ‘Unleash the Appatucker in U’ ஆகிய நூல்களை முன்னேர் பதிப்பகம் வெளியிட்டிருந்தது. இந்நூல்கள் இரண்டுக்கும் நீங்கள் தந்த பேராதரவுக்கு நன்றி. பலரும் இவற்றை அதிக எண்ணிக்கையில் வாங்கி இளைஞர்கள், மாணவர்களுக்குப் பரிசளிக்கிறார்கள். இதனால், வெளியாகி இரு வாரங்களுக்குள் இவை இரண்டாம் பதிப்புக்குச் செல்கின்றன என்கிற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

wrappers

இந்த இரண்டாம் பதிப்பில் படங்களைச் சேர்க்கவுள்ளோம், முதல் பதிப்பிற்கு வந்த சில விமர்சனங்கள், பிழை திருத்தங்களும் செய்யப்படும். இந்நூல்களின் விலை விவரம் பின்னர் தெரிவிக்கிறோம்.

தற்போது, கைவசம் உள்ள சொற்ப முதல் பதிப்புப் பிரதிகளை ஆர்வமுள்ளோருக்கு Clearance Saleபோல 40% தள்ளுபடியில் வழங்கவுள்ளோம். இதற்குக் குறைந்தபட்சம் 2 நூல்கள் (தமிழ் அல்லது ஆங்கிலத்தில்) வாங்கவேண்டும். தபால் செலவு தனி.

தமிழ் நூல் விலை: ரூ 75, சலுகை விலை: ரூ 45 (40% off)
ஆங்கில நூல் விலை: ரூ 90, சலுகை விலை: ரூ 54 (40% off)
தபால் செலவு: தமிழகத்தில் சுமார் ரூ 25 முதல் ரூ 40, ஊரைப் பொறுத்து மாறுபடும்

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புவோர் munnerpub@gmail.comக்கு எழுதலாம். நன்றி!

Standard

நீங்களும் ஆகலாம் அப்பாடக்கர்: நூல் விமர்சனம்

இமய மலையில் ஐஸ் வித்துவிடுவார் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ள வைப்ரன்ட் சுப்பு! எனக்கும் ஸெல்ப் help புத்தகங்களுக்கும் வெகு தூரம். என்னையே புத்தகத்தைக் கையில் எடுத்தப் பின் கடைசி பக்கம் முடித்தப் பின் தான் கீழே வைக்கும்படி செய்த அவரின் வைப்ரன்ட் எழுத்தாற்றலும் செறிவான கருத்துக் கோவையும் பாராட்டுக்குரியது.

wrappers

தலைப்பே very catchy! இராமயணத்தில் ரிஷ்யஸ்ரிஞர் என்று ஒரு முனிவர். அவரின் தமிழ் பெயர் கலைக் கோட்டு முனி. கலை என்றால் மான், கோடு என்றால் கொம்பு. அந்த முனிவரின் நெற்றியில் ஒரு சிறு கொம்புப் போல இருக்கும். அவர் மகா பெரிய அறிஞர். நாம் பேச்சு வழக்கில் பலமுறை அவன் தலையில் என்ன கொம்பா முளைத்திருக்கிறது என்று கேட்போம், அதாவது அவன் என்ன எல்லாம் தெரிந்த ஞானியா என்ற பொருளில். அதுவே இப்போ பேசும்போது அவன் என்ன பெரிய அப்பாடக்கரா என்று கேட்கும் வழக்கம் வந்துள்ளது. இரண்டு சொற்றொடருக்குமமே எப்படி அந்த சொல்வழக்கு வந்தது என்று நம்மில் பலபேருக்குத் தெரியாது ஆனால் கேட்பவருக்கு நாம் என்ன சொல்கிறோம் என்று கண்டிப்பாகப் புரிந்து விடும்.

அது மாதிரி அப்பாடக்கர் என்ற சொல்லும் பழக்கத்தில் வருவதற்கு ஒரு அழகிய காரணம் உள்ளதை இந்தப் புத்தகத்தின் ஆரம்பத்திலேயே தெரிந்துகொள்ளலாம். சென்னையில் வசிப்பவர்களுக்கு இந்த சொல் வெகு பிரபலம். ஆனால் மற்றவர்களுக்கு நடிகர் சந்தானம் சினிமாவில் பயன்படுத்தியதால் தெரிய வந்திருக்கும். அந்த வகையில் இதை பிரபலப் படுத்திய சந்தானத்துக்கு பதிப்பகத்தார் ஒரு புத்தகத்தை இலவசமாக அனுப்பிவைக்கலாம் 🙂

எவரையும் கவரும் எளிமையான எழுத்து இந்தப் புத்தகத்தின் முதல் ப்ளஸ் பாயின்ட். இரண்டாவது, சின்ன சின்ன real life உதாரணகள் மூலம் சொல்ல வந்தக் கருத்தை சுவாரசியமாக சொல்லியுள்ளார் ஆசிரியர் சுப்பு. The book has a very analytical approach. அதனால் படிப்பவர்களை சிந்திக்க வைத்து அவர் சொல்ல வந்ததை மனத்தில் ஏற்றுக் கொள்ள வைக்கிறது. There is no preaching. இப்படி செய் அப்படி செய் என்றால் படிப்பவர்கள் நீ என்ன பெரிய அப்பாடக்கரா? எனக்கு சொல்ல வந்துட்டான்னு புத்தகத்தை மூடி வைத்துவிட்டுப் போய்விடுவார்கள். அந்த மாதிரி தொனி இல்லாமல் ஆழ்ந்த கருத்துக்களையும், நாம் வாழ்க்கையில் முன்னேற எப்படி நம்மை மாற்றிக் கொள்ளவேண்டும் என்பதையும் சாதாரணமாக சொல்லி எடுத்துக் கொள்வதா வேண்டாமா என்பதை படிப்பவர் முடிவுக்கு விட்டு விடுகிறார். இது நல்ல உக்தி.

இந்தப் புத்தகம் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்த வயதுள்ளோருக்கு இந்தப் புத்தகம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் இதை யார் வேண்டுமானாலும் படித்துப் பயன் பெறலாம். அவர் இன்று பிரபலமாக இருக்கும் பலரின் ஆரம்ப வாழ்க்கையை சொல்லி அவர்களின் முன்னேற்றத்தை விவரிக்கும்போது நம்மாலும் முயன்றால் இந்த நிலையை அடையலாம் என்கிற எண்ணம் சட்டென்று மனத்திற்குள் வந்து அமருகிறது.

உழைப்புக்குக் குறுக்கு வழி கிடையாது என்பதையும் மாற்றி சிந்திக்கும்போது வெற்றி எளிதாகிறது என்பதையும் புரிந்துகொள்கிறோம். இலக்கு என்ன என்பதை முதலில் நிர்ணயித்துக் கொண்டால் வழி எளிதாகிறது. இல்லையென்றால் நாம் செக்கு மாட்டைப் போல ஒரே இடத்தில் உழன்று கொண்டிருப்போம், எந்த முன்னேற்றமும் இல்லாமல்.

இந்தப் புத்தகத்தில் எனக்குப் பிடித்த ஒரு கருத்து, “நீங்கள் எங்கே பிறந்தீர்கள்; யாருக்குப் பிறந்தீர்கள்; எந்த நிலையில் பிறந்தீர்கள் என்பதைப் பொறுத்து உங்கள் சாதனையும் வெற்றியும் அமைவதில்லை. ஆகவே அடுத்தவர்களைக் குறைசொல்வதை நிறுத்துங்கள்.”

இந்தப் புத்தகத்தின் பதிப்பகத்தார் “முன்னேர் பதிப்பகம்”. தரமான ஒரு புத்தகத்தை வெளியிட்டதற்கு ஒரு பாராட்டு பொக்கே 🙂 நாலு வரி நோட் பாகம் 1,2,3 க்குப் பிறகு இந்தப் புத்தகத்தை வெளியிடுகிறார்கள் என்று நினைக்கிறேன். நல்ல விற்பனை ஆகி மேலும் நல்ல புத்தகங்களை வெளியிட வாழ்த்துகள்.

ஆசிரியர் வைப்ரன்ட் சுப்புவின் பெயர் காரணம் இந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தவுடன் புரிந்துகொண்டேன் 🙂 அவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.

திருமதி சுஷிமா சேகர்

முன்னேர் பதிப்பகம் +91 (0)9900160925

munnerpub@gmail.com

author email: vibrantsubbu@gmail.com

இந்நூல்களை ஆன்லைனில் வாங்க விரும்புவோர் இந்த இணைப்புகளைப் பயன்படுத்தலாம்:

தமிழ்:

http://600024.com/store/neengalum-aagalam-appatucker-munner-pathippagam

ஆங்கிலம்:

http://600024.com/store/unleash-the-appatucker-in-u-english-vibrant-subbu

Republished From: http://amas32.wordpress.com/2014/06/14/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95/

Standard

ஒரு “டக்கர்” புத்தகம்

எங்களது அடுத்த வெளியீடு, வைப்ரண்ட் சுப்பு எழுதிய ’நீங்களும் ஆகலாம் அப்பாடக்கர்’ புத்தகம் தமிழ் & ஆங்கிலத்தில். இந்நூலின் விமர்சனப் பிரதிகளைப் படித்த சிலருடைய விமர்சனங்கள் இங்கே:

அறிவைக் கொண்டு சமூகத்துக்குச் சக்தி கொடுக்கும் முயற்சி இந்தப் புத்தகம்

– தீபக் ஜஸ்டின்
பேச்சாளர், பயிற்சியாளர், திரைத்துறைக் கலைஞர்

வாழ்க்கையில் எதையாவது சாதிக்கவேண்டும் என்று நினைக்கிற ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்கவேண்டிய நூல் இது

– எஸ். ராஜ்குமார்
Senior AGM, Sundaram Finance Limited

ப்ராக்டிகலான டிப்ஸ், சுவாரஸ்யமான உண்மைக் கதைகளின் துணையோடு எளிய தமிழில் எழுதப்பட்ட பயனுள்ள புத்தகம்

– எஸ். பிரகாஷ்
CEO, See Change Consulting

சுய முன்னேற்றப் புத்தகங்கள் என்றாலே அரைத்த மாவுதானே என்று நினைக்கிறவன் நான். ஆனால் இது மிக வித்தியாசமான அனுபவம். தன்னுடைய முதல் புத்தகத்திலேயே கலகலப்பையும் கருத்துத் தெளிவையும் கலந்து கொடுத்து அசத்தியிருக்கிறார் ஆசிரியர்

– ரோஹித்,
Founder, Fund My Dream

wrappers

இந்நூலை Preorder செய்ய:

தமிழ்:

http://600024.com/store/neengalum-aagalam-appatucker-munner-pathippagam

ஆங்கிலம்:

http://600024.com/store/unleash-the-appatucker-in-u-english-vibrant-subbu

Standard